குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ஷ
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது என்பது தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
(Visited 47 times, 1 visits today)





