ஒற்றையாட்சியைக் காக்க கூடிய ஒரே தலைவர் நாமல்: சரத் வீரசேகர புகழாரம்!
“பௌத்த சாசனம்மீது விமர்சனக்கணை தொடுக்கும் NPP அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara. தெரிவித்தார்.
“ எனது நாட்டில் சாசனம் மற்றும் வளங்களை பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும்.
ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது நாமல் ராஜபக்சதான்.” -எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
தமக்குரிய வாக்கு குறையும் என தெரிந்தும் அவர் அந்த அறிவிப்பை விடுத்தார்.
அப்படியான ஒருவர் ஜனாதிபதியானால்தான் இந்நாட்டையும், சாசனத்தையும் பாதுகாக்க முடியும். பௌத்த பிக்குகளுக்குரிய கௌரவம் மீள கிடைக்கப்பெறும். “ என சரத் வீரசேகர மேலும் கூறினார்.





