அரசாங்க அதிபருடன் நயினாதீவு விகாராதிபதி சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது விகாரை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விகாராதிபதி கேட்டறிந்ததோடு, இது குறித்த தமது தரப்பு நிலைப்பாடுகளையும் அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தினார்.
இச்சந்திப்பு தொடர்பான தகவல்களை யாழ். மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.





