தென் கொரியாவில் குவியும் மர்மப்பொட்டலங்கள் – சீனா விசாரணை
தென் கொரியாவுக்கு மர்மப் பொட்டலங்கள் அனுப்பப்பட்டு வருவதாகக் கிடைத்த புகார்களைப் பெய்ச்சிங் விசாரிக்கிறது.
சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான மர்மப் பொட்டலங்கள் தொடர்ந்து அனு்பபி வைக்கப்படுகின்றது.
சில பொட்டலங்களில் அடையாளம் தெரியாத ஆபத்தான பொருள்கள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பொட்டலங்கள் குறித்த விசாரணைக்கு உதவுமாறு தென் கொரியா கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தாங்கள் விசாரிப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
அனைத்துலக அளவில் சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள் தொடர்பில் காவல்துறை 2,793 புகார்களைப் பெற்றுள்ளதாக சோல் கூறியது.
அவற்றில் 679 பொட்டலங்கள் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. எனினும், பயங்கரவாதம் குறித்த சந்தேகம் ஏதும் இல்லை என்று தென் கொரியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அவற்றில்
நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது ஆபத்தான பொருள்களும் இல்லை.