ஜெர்மனியில் ATM இயந்திரங்களுக்கு ஆபத்தாக மாறும் மர்ம கும்பல்
ஜெர்மனியில் வங்கிகளின் ATM எனப்படும் பண பரிமாற்று இயந்திரங்கள் உடைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள மேடன்பர்க் பகுதியிலுள்ள பண பரிமாற்று இயந்திரம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றில் வங்கிகளுக்கு சொந்தமான பண இயந்திரங்கள் உள்ளன.
அதில் வங்கியின் பண இயந்திரத்தின் மீது குண்டு வைத்து தகர்க்கப்பட்டு பணம் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது. குறித்த கட்டிடத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாகவும், அது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, வங்கிகளுக்கு சொந்தமான பண இயந்திரங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு பணம் கொள்ளையிடும் சம்பவங்கள் இந்த வருடத்தில் குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வங்கிகளுக்கு சொந்தமான 32 பண இயந்திரங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.