இலங்கையில் சிறுவர்களிடையே வேகமாக பரவும் மர்ம வைரஸ் காய்ச்சல்
டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
(Visited 5 times, 1 visits today)