மாயமான ரஷ்ய விமானம் விபத்தில் சிக்கியது – 25 பேருடன் புறப்பட்ட மீட்பு ஹெலிகாப்டர்!

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
An-24 என்ற விமானம் மோசமான வானிலை காரணமாக ரேடாரில் இருந்து மாயமாகியிருந்த நிலையில் அதனை தேடும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன.
இந்நிலையில் ஒரு காட்டுப்பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இதுவரை வான்வழி ஆய்வு மட்டுமே சாத்தியமானது, மேலும் உயிர் பிழைத்தவர்களைக் காணவில்லை. 25 பேர் கொண்ட மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு ஒரு மணி நேர பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)