ஜெர்மனி மக்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகள் – பொலிஸார் எச்சரிக்கை
ஜெர்மனி மக்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெர்மனியில் டியுஸ்பேர்க் நகரத்தில் தொலைபேசி மூலம் முதியவர்களுடன் தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கில் இருந்து பண மோசடிகள் நடைபெற்றுள்ளதனை தொடர்ந்து பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
டியுஸ்பேர்க் நகரத்தில் சில கும்பல் முதியவர்களுடன் தொடர்பு கொண்டு தாங்கள் வங்கியில் கடமையாற்றுகின்றதாக தெரிவித்து அறிமுகப்படுத்தியள்ளனர்.
மேலும் முதியவர்களின் வங்கி அட்டைகளை சரி பார்க்க வேண்டும் என்று தொலைபேசியின் மூலம் கூறி வங்கி அட்டையின் pin இலக்கத்தை அதாவது இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் சில பெண்களை முதியவர்களிடம் அனுப்பி வங்கி அட்டைகளை பெற்றுக்கொண்டதாகவுமம் தெரியவந்திருக்கின்றது.
மேலும் மோசடியில் ஈடுப்பட்ட நபர்கள் வங்கி அட்டையின் ஊடாக பண இயந்திரத்தில் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரிய வந்திருக்கின்றது.
இந்த பண மோசடியில் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தாக தெரிய வந்திருக்கின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்திருக்கின்றது.