வட அமெரிக்கா

அமெரிக்காவில் பூங்கா அருகே துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் ; மூவர் பலி!

அமெரிக்காவின் ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் 3 பேர் காயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்கள் 27 வயதான மலாச்சி பீ(27) டான்ட்ரே புல்லக் (18)கார்சியா டிக்சன் ஜூனியர் (26) என்பது தெரியவந்தது. காயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சந்தேக நபர்கள் யாரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணமும் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!