நைஜீரியாவில் கிராமவாசிகளை சுட்டுக்கொன்ற மர்மக் கும்பல் – பலர் உயிரிழப்பு!
நைஜீரியாவில் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் கும்பலால் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.
நைஜர் மாநிலத்தின் உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள கசுவான்-டாஜி ( Kasuwan-Daji ) கிராமத்திற்குள் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதுடன், மக்களின் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் சுமார் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் இன்னும் அந்தப் பகுதிக்கு வரவில்லை என்றும், கடத்தப்பட்டவர்களைத் தேடுவதற்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





