ஐரோப்பா

பிரித்தானியாவில் கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்!(வீடியோ)

பிரித்தானியாவில் மோட்டார் சைக்கிளில் வலம்வந்த தீவைப்பு கும்பல் ஒன்று, சாலையில் நின்று கொண்டு இருந்த 12 கார்களுக்கு தீ மூட்டி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் டோர்செட்-டின், விம்போர்ன் பகுதியில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த தீ வைப்பு கும்பல் ஒன்று, அங்கு சாலையில் நின்று கொண்டு இருந்த கார்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.பெரும்பாலான குடியிருப்புவாசிகள் உறங்கிக் கொண்டு இருக்கும் போது தீவைப்பு கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது.

பயங்கர இந்த தீவைப்பு சம்பவத்திற்கு பிறகு, திங்கட்கிழமை(15) அதிகாலை சாலையை பார்வையிட்ட அப்பகுதி குடியிருப்புவாசிகள் நகரை போர் பாதித்த நகருடன் ஒப்பிட்டனர். தீ வைக்கப்பட்ட கார்களில் இருந்து பயங்கர வெடி சத்தங்கள், அடர்த்தியான புகை வெளியேறியதை தொடர்ந்து, நள்ளிரவு 1:20 மணியளவில் கண்விழித்த குடியிருப்பு வாசி ஒருவர், சாலையில் நின்று கொண்டு இருந்த கார்கள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போர் நகரம் போல் காட்சியளித்த பிரித்தானிய சாலை: கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல் | Arson Gang Sets Fire On 12 Cars In Wimborne Uk

இந்த சம்பவத்தை தொடர்ந்து டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்களுக்கு இரவு 11:30 மணி முதல் 2:30 மணி வரை 65 அவசர அழைப்புகள் அழைக்கப்பட்டுள்ளது.பூல் சாலையில் நின்ற காரில் வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள வீட்டிற்கும் பரவியது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், கார்களில் வைக்கப்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் வழங்கியுள்ள தகவலில், 12 கார்கள் மற்றும் வீடு ஒன்று தீயில் கருகி சேதமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை தொடங்கி இருப்பதாகவும், cctv காட்சிகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த சம்பவத்தில் பொதுமக்களுக்கு யாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/i/status/1658117072667262977

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்