இலங்கை

இலங்கையின் வட மாகாணத்தில் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல் – அதிகரிக்கும் மரணங்கள்

வட மாகாணத்தில் பரவும் மர்ம காய்ச்சல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், குறித்த 7 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சுவாசப்பையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த நோய் காரணி தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை. திக்கப்பட்டுள்ளவர்களின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த நோய் நிலைமை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆ.கேதீஸ்வரன், காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

(Visited 61 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!