அமெரிக்க வானில் மர்ம டிரோன்கள் – டிரம்ப் விடுத்த அதிரடி உத்தரவு
அமெரிக்க வானில் வட்டமிடும் மர்ம டிரோன்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் வான்பரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம டிரோன்கள் பறந்துள்ளன.
இதேபோல் மற்ற பகுதிகளிலும் மர்ம டிரோன்கள் வட்டமடித்துள்ளன. மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டிரம்ப்புக்கு சொந்தமான கோல்ப் மைதானத்தின் மீதும் மர்ம டிரோன்கள் பறந்துள்ளது.
இந்த டிரோன்களால் தேச பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டிரம்ப் தன் சமூகவலைதள பக்கத்தில், “நாடு முழுவதும் மர்ம டிரோன்கள் பறக்கின்றன. இது அரசுக்கு தெரியாமல் நடக்குமா? நான் அப்படி நினைக்கவில்லை. இந்த மர்ம டிரோன்கள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் அல்லது அவற்றை சுட்டு வீழ்த்துங்கள்” என தெரிவித்துள்ளார்.