இலங்கையில் மாயமான சீன பிரஜை!

பயாகல கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சீன பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர் 54 வயதான Zhang Xiaolong என்ற சீன நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன சீன பிரஜை, பயாகல வடக்கு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமற்போன நபரை பிரதேசவாசிகள் கடற்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடி வருகின்ற போதிலும், நேற்று (21.12) பிற்பகல் வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 14 times, 1 visits today)