மியன்மார் ராணுவ அரசிற்கு வெளிநாட்டிலிருந்து பணம், ஆயுதங்கள் கிடைக்கின்றன :UN நிபுணர்
மியன்மார் ராணுவத்தை தனிமைப்படுத்தும் அனைத்துலக முயற்சிகள் பெருமளவில் பலனளிக்கவில்லை. அதற்கு வெளிநாட்டிலிருந்து பணமும் ஆயுதங்களும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன என்று ஜூன் 26ஆம் திகதியன்று ஐநா அறிக்கை ஒன்று தெரிவித்தது.
2021ல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.இதையடுத்து ராணுவத்தின் நிதி, வங்கி, இதர தொடர்புடைய வர்த்தகங்களுக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சியை எதிர்த்து வந்த உள்ளூர் ஆர்ப்பாட்டங்களும் முழு அளவில் வளர்ந்து உள்நாட்டுப் போருக்கு வழி வகுத்துள்ளது. ராணுவம், குடியிருப்பாளர்கள் மீதும் வான்வழி தாக்குதல்களை நடத்தி ஆர்ப்பாட்டங்களை நசுக்கி வருகிறது. அதே சமயத்தில் ராணுவம் பெரும் நிலப் பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
மியன்மாரில் நடக்கும் மனித உரிமை மீறல் பற்றி அறிக்கை தயாரித்துள்ள ஐநா சிறப்பு நிபுணர் டாம் ஆண்ட்ருஸ், ராணுவம், 2024 மார்ச் வரையில் இறக்குமதி செய்த ஆயுதங்கள், இரட்டை தொழில்நுட்பங்கள், தயாரிப்புச் சாதனங்கள் மற்றும் இதர பொருள்களின் மதிப்பு 253 மில்லியன் யுஎஸ் டொலர் என்று தெரிவித்துள்ளார்.
இது, முந்தைய ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டதைவிட மூன்றில் ஒரு மடங்கு குறைவு.