மலேசியா அருகே மியான்மர் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
தாய்லாந்து-மலேசியா(Thai-Malaysia) எல்லைக்கு அருகே மியான்மரிலிருந்து(Myanmar) வந்த நூற்றுக்கணக்கான குடியேறிகளின் படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்களின் 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியான்மரின் ராக்கைன்(Rakhine) மாநிலத்திலிருந்து புறப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மலேசியாவின் லங்காவி(Langkawi ) தீவுக்கு வடக்கே மற்றும் தாய்லாந்தின் கோ தருடாவோ(Ko Tarutao) தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
300 பேருடன் புறப்பட்ட கப்பல் மலேசியாவை நெருங்கியதும் பயணிகள் மூன்று சிறிய படகுகளுக்கு பிரிக்கப்பட்ட பின்னர் அதில் ஒரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை மற்றும் கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேலும் ஏழு நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மலேசியாவின் வடக்கு மாநிலங்களான கெடா(Kedah) மற்றும் பெர்லிஸின்(Perlis) கடல்சார் அமலாக்க நிறுவன இயக்குனர் ரோம்லி முஸ்தபா(Romli Mustafa) செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
மலேசியா அருகே மியான்மர் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து – 7 பேர் மரணம்(Update)




