மியான்மர் நிலநடுக்கம்: தாய்லாந்தில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மியான்மரில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாங்காக் மற்றும் தாய்லாந்தின் பிற பகுதிகளில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் நிரந்தர தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரஜைகள் தொடர்பில் எந்தவிதமான பாதகமான சம்பவங்களும் இதுவரை பதிவாகவில்லை என இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதரகம் கூறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அவசரச் சந்தர்ப்பங்களில் +66 812498011 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(Visited 4 times, 1 visits today)