இலங்கை செய்தி

“‘என் பிள்ளை அருகில் இருக்க வேண்டும்’ – நிறைவேறாத இறுதி ஆசை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!

கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் ஒரே உறவான சுப்பிரமணியம் கமலாதேவி ((வயது-79) , புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார்.

தாய்-தந்தை, குடும்பம்-உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரனின் விடுதலைக்காக அல்லும் பகலும் அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து,  புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து அவர் மரணடைந்துள்ளார் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு இவ்வாறான சோகம் தொடர்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!