இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : உண்மை வெளிப்படுமா என்பதில் சந்தேகம்!

திருட்டில் ஈடுபட்ட நபர் பொது மக்களுடன் ஒன்றிணைந்து திருடன், திருடன் என கூச்சலிடுவதை போலவே எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது  என க்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்துமா ?என்பது சந்தேகத்துக்குரியது.

எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதிப்பது சட்டவிரோதமானது என நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.

ஆனால் நட்ட ஈடு பெற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் சாமர குணசேகர என்பவருக்கு 250 மில்லியன் டொலர் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டது மாத்திரம் சட்டத்துக்கு முரணானது இல்லையா  இந்த 250 மில்லியன் டொலர் இலஞ்சம் விவகாரத்தின் உண்மை தன்மை முதலில் ஆராயப்பட வேண்டும்.

பொது இடத்தில் திருட்டில் ஈடுபடும் நபர் பொது மக்களுடன் ஒன்றிணைந்து ‘திருடன்இதிருடன் ‘என கூச்சலிடுவதற்கு ஒப்பானதாகவே இந்த 250 மில்லியன் டொலர் இலஞ்சம் விவகாரம் காணப்படுகிறது.எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்துமா என்பது சந்தேகத்துக்குரியது என்றார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை