மூதூரிற்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு திருத்த பணி ஆரம்பம்
திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணியில் இராணுவத்தினர் பிரதேச மக்கள் நீர் வளங்கள் அதிகார சபையினர் குறித்த திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் கட்டைபறிச்சான் மூதூர் அம்மன்நகர் கங்குலேலி உள்ளிட்ட அண்மைக் கிராமங்களில் உள்ள மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது சீரமைக்கப்பட்ட பின்னர் மிக விரைவில் நீர் கொண்டு செல்லப்பட்டு நீர் சுத்திகரிக்கப்பட்டு விரைவாக குடிநீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு குடிப்பதற்கு குடிநீர் இன்றி தவிர்க்கும் மூதூர், வெறுகல் மற்றும் இதர பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் மிக விரைவாக இதனை மீள் புணரமைத்து வருவதாக திருகோணமலை மாவட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மேலும் குறித்த பிரதேசத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் அரச உயர் அதிகாரிகளும் வருகை தந்து சமூக அக்கறையுடன் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இன்னும் உற்சாகமூட்டி அவசரமாக குடி நீரை வழங்குவதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதையும் எம்மால் காணக் கூடியதாக இருக்கின்றது.






