07 நாட்களில் வெளியேற வேண்டும் : அமெரிக்காவிற்கு கெடு விதித்த ரஷ்யா!

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஏழு நாட்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கயைில், அமெரிக்க தூதுவர் லின் ட்ரேசியை வரவழைத்து இந்த உத்தரவை வழங்கியதாக தெரிவித்துள்ளது.
தூதரக முதல் செயலாளர் ஜெஃப்ரி சில்லின் மற்றும் இரண்டாவது செயலாளர் டேவிட் பெர்ன்ஸ்டீன் ஆகியோர் ஏழு நாட்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள அமெரிக்கா இரண்டு தூதரக அதிகாரிகளின் வெளியேற்றம் தூண்டுதலற்றது என்றும், வாஷிங்டன் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)