இந்தியா செய்தி

இஸ்லாமிய பெண்களின் ஓட்டு பாஜகவிற்கு மட்டுமே – சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி நேற்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமான மூலம் தமிழகம் திரும்பிய அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

பாஜக தேசியத் தலைவர் நட்டா அவர்கள் தலைமையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி நான் என்னை பாஜகவில் இணைத்து கொண்டேன். காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகாலம் பணியாற்றிய நபர் நான். ஆனால் சமீப காலமாக நீங்களே பார்த்திருப்பீர்கள் பல பிரச்சனைகள் காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளது.பெண்களுக்கு உண்டான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டுள்ளது.

என்னை ஒருத்தியை தவிர வேறு யாரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட கிடையாது. கடந்த 14 ஆண்டு காலமாக நான் சட்டமன்ற உறுப்பினராக இயங்கி வருகிறேன். என்னை கூட அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு தான் அவர்களது செயல்பாடுகள் உள்ளது.

தேசிய கட்சியில் இருந்து நான் இன்னொரு தேசிய கட்சிக்கு சென்று உள்ளேன். அதே நேரம் அங்கு உள்ள செயல்பாடுகள் என்பது பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது.குறிப்பாக பெண்கள் அரசியல் களத்தில் பணியாற்றுவதற்கு சிரமத்தை உண்டு பண்ணுகிறார்கள். அதற்கு வேறு என்ன வழி அதே நேரம் என்னுடைய உழைப்பு மாணவர் காங்கிரஸ் பருவத்தில் இருந்து தொடங்கி கட்சிப் பணியாற்றி வருகிறேன்.

37 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிய நபர் நான் எந்த கட்சிக்கும் செல்லாதவள்.ஆனால் இப்போது இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்றால் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எந்த நோக்கமும் இல்லாமல் வேலை பார்த்தவள் நான். ஆனால் ஒரு தலைமை பதவி என்று வந்தால் பெண்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் தான் தவறானது.ஏன் பெண்கள் எதுவும் செய்ய முடியாதா? எங்களால் எதுவும் முடியாதா? சட்டமன்ற உறுப்பினரோடு நிற்க வேண்டுமா தலைமை பதவிக்கு வந்து மக்கள் பணியாற்ற முடியாதா? நிச்சயமாக முடியும்.

அதில் அவநம்பிக்கை கொண்டவர்கள் தான் இந்த காங்கிரஸ் கட்சியினர். அந்த ஒரு நிலைப்பாடு கிட்டத்தட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அங்கீகாரம் என்பது மறுக்கப்பட்டதாக இருக்கிறது.என்னை போன்ற பல ஆண்டுகாலம் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவது தொடர்கிறது.இளம் பெண்கள் எப்படி அந்த கட்சிக்கு செல்வார்கள். பாஜகவை பொறுத்தவரை நீங்களே பார்த்திருப்பீர்கள் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். பல மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.

அவர்கள் நல்லபடியாக கட்சிக்கு பணியாற்றுகிறார்கள் மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் சிறப்பாக வேலை பார்த்துக் கொண்டுள்ளனர் தலைமை பண்புடன் செயல்பட்டு கொண்டுள்ளனர் என்பதை உணர்த்துகிறது .பாரதிய ஜனதா கட்சி அதன் வெளிப்பாடு தான் என்னுடைய நிலைப்பாட்டிற்கு காரணம். அதனால் தான் இன்றைக்கு நான் பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன்

நரேந்திர மோடி அவர்கள் பெண்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கி உள்ளார்கள். விரைவில் அமல்படுத்தப்படும் இஸ்லாமிய பெண்களுக்கான முத்தலாக் பிரச்சனைகளுக்கு தீர்வு. அதுமட்டுமல்லாது இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை வாங்கி தந்து இருக்கிறார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய பெண்கள் வேறு யாருக்கு ஓட்டு போட சொன்னாலும் ஓட்டு போட மாட்டார்கள். உறுதியாக பாஜகவிற்கு மட்டும்தான் ஓட்டு போடுவார்கள்.தாமரைக்கு தான் அவர்கள் ஓட்டு. அவர்கள் மனதை யாராலும் மாற்ற முடியாது. இதனால் அவர்கள் மனதில் பாஜக மற்றும் பிரதமரும் தான் இருக்கிறார்கள். அதுதான் எங்கள் மனதிலும் இருப்பதற்கு உண்டான நியாயம்

வேண்டாம் வேண்டாம் என்று துரத்துகிற காங்கிரஸ் கட்சியில் எங்கு பயணிப்பது.இங்கு உள்ளது போல் 33 சதவீதம் சீட்டு கொடுப்பார்களா பெண்களுக்கு என்று நான் கேட்கிறேன்? ஆகையால் என்னை பொறுத்தவரை பாஜக வில் பெண்களுக்கு பெண்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் எடுத்துக் கொள்கிறார்கள்.

மத்திய அரசின் ரேஷன் திட்டம் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கங்களில் மட்டும்தான் செயல்படுத்தப்படவில்லை. ஏன் அருகில் உள்ள லட்சதீபம் அந்தமான் நிக்கோபார் போன்ற தீவுகளில் கூட மத்திய அரசின் ரேஷன் திட்டமான ஐந்து கிலோ இலவச அரிசி ஒரு கிலோ பருப்பு ஒரு கிலோ எண்ணெய் போன்றவற்றை அனைத்து நபர்களுக்கும் கொடுத்து வருகிறார்கள் .ஆனால் தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் நிறைவேற்ற வில்லை.ஏன் இது மக்களுக்கு சென்று சேரக்கூடாதா?

நிச்சயமாக சேர வேண்டும்.இதே போல மக்களை சேர வேண்டிய மத்திய அரசின் திட்டங்களை அரசியல் காரணங்கள் கருதி தடுக்காதீர்கள்.அந்த திட்டங்களை அமல்படுத்துங்கள்.அதற்கு மேல் அரசியலில் மக்கள் உங்களை விரும்பத்தக்கவர்களாக மாற்றுவதற்காக நீங்கள் மாறுங்கள். முடிந்தால் ஜெயித்து காட்டுங்கள்.

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு இந்த திட்டங்கள் சென்று சேரவில்லை.எப்படி கொண்டு சேர்ப்பது எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அதை நிறைவேற்றுகிற கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதனால் பாஜகவுடன் இணைந்து பயணித்தால் தான் இந்த திட்டங்களை சென்று சேர்க்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை எடுத்துக் கொள்ளுங்கள் நாற்கரசாலை என்பது தற்போது வரை போட முடியவில்லை.

எந்த எம் பி யும் சரியாக செயல்படவில்லை. நான்காண்டுகளாக ஒரு காங்கிரஸ் எம்பி உள்ளார் அவரும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்தியாவிலேயே ஏன் பாராளுமன்றத்திலேயே கன்னியாகுமரி தொகுதி மட்டும் தான் நாற்கர சாலை இல்லாத தொகுதி

நிறைய விஷயங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படாமல் உள்ளது. அதை கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் இருந்தால் தான் முடியும் அதுவும் ஆளுங்கட்சியுடன் பயணித்தால் தான் கொண்டு சேர்க்க முடியும் அந்த நிலைப்பாடு தான் நாட்டின் வளர்ச்சி. நம் நாடு எப்பேர்பட்ட நல்ல பெயரை பெற்றுள்ளது என்பது மோடியின் தலைமையில் இந்தியர்கள் வெளிநாட்டில் பெருமையாக வாழக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள்.

அதே போல் அவர்கள் அனைவரும் பேட்டியும் கொடுக்கின்றனர்.எனவே அவர்கள் அனைவரும் மோடியின் ஆட்சிக்கு சாட்சியாக இருக்கின்றனர். நிச்சயமாக நாட்டின் வளர்ச்சி அடைய வேண்டும் தனிநபர் வருமானம் உயர வேண்டும். முன்னேறிய மாநிலமாக நினைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சரியாக இந்த திட்டங்களை செயல்படுத்தினால் தான் முன்னேற முடியும்.

இல்லையென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பின் தங்கிய மாநிலமாக மாறும்.எனவே நிச்சயமாக மக்கள் விராத போக்குடன் இருக்கக் கூடாது.மத்திய அரசு அதனால் தான் தன் கவனத்தை தமிழகம் ஏதும் தமிழக மக்கள் மீதும் செலுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமரும் தமிழகம் மீதும் தமிழக மக்கள் மீதும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.அதனால் தான் எங்கு இருக்க வேண்டுமோ அங்கே இருக்கிறோம்

குறிப்பாக பெண்களுக்கு பதவிகள் காங்கிரஸ் கட்சியில் கொடுப்பதில்லை. எந்த பதவி வந்தாலும் அவர்கள் தடுக்கிறார்கள்.அதுதான் உண்மை அது மட்டும் காரணம் அல்ல அடுத்தடுத்து வளர்ச்சியும் கூட எங்களுடைய பாராளுமன்ற மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சி தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற வளர்ச்சியை பார்த்தால் மக்களுக்கு நன்றாக தெரியும்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரத யாத்திரை சென்று நடைபயணம் சென்று மக்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய சீரிய முயற்சியால் இன்றைக்கு பாஜக பெரிய அளவில் சாதித்து உள்ளது.அதுவும் ஒரு காரணம் தான் என்னை போன்றவர்கள் பாஜகவில் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது இது போன்ற காரணங்களும் தான். மக்களுக்காக நன்மையை அளிக்கக்கூடிய ஒரு கட்சியாக தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதை அண்ணாமலை தலைமையில் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

அதனால் தான் அண்ணாமலை அவர்கள் எதிர் கட்சியாக இயங்குகிறார். எதிர்க்கட்சியாக கேள்விகளை எழுப்புகிறார். அந்த இடத்தில் எதிர்க்கட்சிகளாக யாரும் செயல்படவில்லை. அவருடைய தலைமையில் நிச்சயமாக பெரிய வெற்றியும் வாக்கு சதவீதத்தையும் பெரும் என்பது என்னுடைய ஆழமான கருத்து

தேர்தலில் நிற்பது குறித்து கட்சி மேலிடம் என்ன முடிவு செய்தாலும் அதுவாகத்தான் இருக்கும். என்னுடைய முடிவும் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. நான் விருப்பப்பட்டு தான் பாஜகவில் குறிப்பாக ஒரு தேசிய கட்சி என்ற முறையில் என்னை இணைத்துக் கொண்டேன்.

பிரதமரின் சீரிய முயற்சியில் அவர் மக்கள் மீது கொண்ட அன்பு பாசம் குறிப்பாக வயோதிகர்களுக்கும் நிறைய திட்டங்கள் பெண்கள் குழந்தைகள் சார்ந்து பல துறைக்குமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.இதை படித்து தெரிந்து கொண்டு மக்களுக்கு நல்லதை கொடுக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தாததால் தான் உங்களுக்கு தெரியவில்லை.

தயவு செய்து தேசிய திட்டங்களை செயல்படுத்துங்கள். செயல்படுத்தினால் தான் உங்கள் அனைவருக்கும் அது நல்லதா கெட்டதா என்பது தெரியவரும்.அது குறித்து விவாதத்திற்கு வரும்பொழுது தான் அது மக்களுக்கு சேர்கிறதா என்பதை நாம் பார்க்க முடியும்.தமிழ்நாட்டில் நிச்சயமாக தேசிய திட்டங்களை கொண்டு வரக்கூடாது என நினைப்பது தவறான ஒன்று

காங்கிரஸ் கட்சியிலிருந்து எத்தனை பேர் இணைகிறார்கள் என்ற தகவல் எனக்கு தெரியாது நிச்சயமாக இணைவார்கள். அது உங்களுக்கு சர்ப்ரைஸ் ஆக கூறுவார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் ஏற்கனவே முயற்சி எடுத்து இருக்க வேண்டும். பெண்களுக்கு என்ன வேண்டும் என்ற முயற்சியை எடுத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வழியை பார்த்து தான் போக செய்வார்கள். நிறைய பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு போக ஆரம்பித்து விட்டார்கள் ஏன் இதற்கு முன்னர் பலரும் வெளியே சென்று விட்டார்கள்.

நான் கடந்த 14 ஆண்டுகளாக தீவிர தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். மக்களை அணுகியிருக்கக்கூடிய சூழ்நிலையில் சாதாரண பெண்மணியாக இருந்து அதற்குண்டான தளத்தில் வேகமாக செயல்பட வேண்டும் அந்த வழியைதான் காங்கிரஸ் கட்சி அடைத்ததாக பார்க்கிறேன். பாஜகவில் அந்த வழி என்பது நீண்ட வழியாக விசாலமான வழியாக தனித்து பயணிக்க கூடிய நிறைய அம்சங்களுடன் உள்ளது. நிச்சயமாக அதிகமான பெண்கள் பாஜகவை நோக்கி பயணிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும்

37 வருடங்கள் கட்சிக்காக வேலை பார்த்தேன். எனக்கு இவர்கள் செய்வது துரோகம் மட்டும்தான். பாஜகவிற்கு விலகிச் செல்கிறேன் என்ற செய்தி ஊடகங்களில் கூட கடந்த இரண்டு வாரமாக பேசப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றனர்.அப்போது அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஏன் ஒரு தொலைபேசியிலாவது அழைத்து என்னை விசாரித்து இருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.இதுதான் அவர்கள் மனநிலை. இரண்டு வாரங்களாக காத்திருந்தேன் அவர்கள் எதுவும் செய்யவில்லை ஆனால் இன்றைக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.

இதே காங்கிரஸ் கட்சியில் ஃப்ளோர் லீடர் பதவிக்கு அடுத்தபடியாக நான் இருந்தேன்.அவர்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் வேறு ஏதோ ஒரு காரணம் கூறி அவர்கள் வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள். ஏன் பெண்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கக் கூடாதா? அதேபோல சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தான் சட்டமன்றத்தில் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது நான் நிச்சயமாக கடுமையாக விமர்சித்து பேசியது கிடையாது. ஒரு கிளிப்பிங் எடுத்து கொடுங்கள் பார்ப்போம். அந்த நேரத்தில் உள்ள நிலைபாட்டை அந்த நேரத்தில் பேசி இருக்கிறேனே தவிர எந்த இடத்திலும் மக்கள் பிரச்சனையை தட்டி கேட்கக்கூடிய இடத்தில் இருந்திருக்கின்றேன். இப்பொழுதும் எந்த தவறாக இருந்தாலும் தட்டிக் கேட்க தயங்க மாட்டேன்.

இது சம்பந்தமாக விமர்சனம் செய்து கஷ்டப்படுத்த வேண்டாம் அந்த வகையில் அவர்களுடைய நிலைப்பாடு இருக்கட்டும் எனக்கு பிரச்சனை இல்லை. என்னை பாஜக ஆதரித்து எனக்கு முக்கியத்துவம் அளித்து மரியாதை கொடுக்கிறார்கள்.மக்கள் தளத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்புகளை தருவார்கள்.அதுவே எனக்கு சந்தோசம். என்றுதான் பார்க்கிறேன் மாநிலத் தலைவர் அவர்கள் தான் மற்ற விஷயங்கள் குறித்து கூற வேண்டும். அதை நான் முந்திக் கொண்டு செல்லக்கூடாது அதுதான் புரோட்டாகால்.

என்ன விமர்சனம் வேண்டுமென்றாலும் செய்யட்டும். பெட்ரோமாக்ஸ் லைட் பியூஸ் போன பல்ப் என்று கூறுகிறார்கள்., பிறகு எப்படி மீடியாக்கள் என்னை கேள்வி கேட்டு பேட்டி எடுக்கிறார்கள் நான் சூப்பராக இருக்கும் எல் இ டி விளக்கு என்றுதான் இவ்வளவு பேர் நிற்கிறீர்கள் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

நான் சந்தோஷப்படுகிறேன் எதிர்க்கட்சியாக கூட இல்லாத அளவிற்கு கட்சியை ஆக்கி வைத்துள்ளனர் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்க வேண்டும் அதைத்தான் அவர்கள் எத்தனை நாளைக்கு எல்லாத்தையும் சேர்த்து என்ன செய்தார்கள் காங்கிரஸ் அழிவு பாதைக்கு செல்வதை சீமான் இப்போதாவது புரிந்து வைத்துள்ளார் அதை ஒப்புக் கொண்டுள்ளார்

சபாநாயகர் திமுகவை சார்ந்தவர்தான் இருந்தாலும் அப்படி சொல்லக்கூடாது சபாநாயகர் அவர்கள் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தான் பேச வாய்ப்பை கொடுப்பார். அதில் தான் நிறைய சிரமங்கள் உள்ளது. போராடி தான் ஒரு வாய்ப்பை பெற வேண்டும் என்ற சூழ்நிலை பல நேரங்களில் என்னுடைய போராட்டத்திற்கு பிறகு தான் பார்த்திருப்பீர்கள். அப்பொழுது நான் நன்றாக பேசி இருப்பேன். நான் ஒரு போராளி அதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா விடுங்கள் பார்த்துக் கொள்வோம்.

பாஜகவில் வானதி சீனிவாசன் மகிளா மோட்சா தலைவராக உள்ளார் மக்கள் பிரச்சனைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஆனால் இதே காங்கிரஸ் கட்சியில் அந்த பதவி காலியாக இருந்த போது அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன் அவர்கள் ஹிந்தி தெரிந்த ஒரு நபருக்கு மட்டும் தான் அதை வழங்குவோம் என்று கூறி தட்டிக் கழித்து விட்டனர்.ஆனால் பாஜகவில் அப்படி இல்லை தமிழகத்தில் இருந்து ஒரு பெண் மகிளா மோட்சா தலைவியாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றார் வானதி சீனிவாசனைப் பொறுத்தவரை நான் வாழ்த்துகிறேன். அவருடைய பணி சிறப்பாக உள்ளது

மக்கள் பிரச்சனையை பேசுவதற்கு தான் சட்டமன்றமே தவிர மக்கள் பிரச்சனையை அனுமதிக்காத இடத்தில் சட்டமன்ற உறுப்பினராக இயங்கி வருவது வேஸ்ட் ஆக உள்ளது இது மிகவும் சிரமமாக உள்ளது தொகுதியில் பல பிரச்சனைகளை எடுத்துக் கூற முடியவில்லை சபாநாயகர் அனைவருக்கும் அந்த வாய்ப்புகளை தர வேண்டும் என்பது எனது கோரிக்கை என்றார்…..

(Visited 2 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content