முஸ்லிம் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் – இரா. சாணக்கியன்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டது தொடர்பில் பேசப்பட்டது என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன், பாராளுமன்றத்தில், புதன்கிழமை (24) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) விசேட கூற்றை முன்வத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த நேரத்தில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளித்து அரசை பாதுகாத்த முஸ்லிம் எம்.பி.க்களும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் ,அவ்வாறு ஆதரவளித்தவர்கள் இன்று அதனைப்பற்றி இந்த சபையில் பேசுவது வேடிக்கையானது என்றார்.
(Visited 11 times, 1 visits today)