அமைச்சருடன் மஸ்க் வாக்குவாதம் – மோதலை வேடிக்கை பார்த்த அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சருடன் எலான் மஸ்க் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை ஜனாதிபதி ட்ரம்ப் கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில், பணி நீக்கம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவுக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை ட்ரம்ப் வேடிக்கை மட்டும் பார்த்ததாக கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம், கூட்டத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என ட்ரம்ப் கோபத்துடன் கூறியது விவாதமாகியுள்ளது.
(Visited 28 times, 1 visits today)