இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

டிரம்பை நேரடியாக எதிர்க்கும் மஸ்க் – புதிய கட்சி ஆரம்பம்

“அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியுள்ளார்.

அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார். டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார்.

தற்போது, அமெரிக்கா கட்சி என்ற பெயரில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், எலான் மஸ்க் கூறியிருப்பதாவது, இன்று அமெரிக்கக் கட்சி உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்ப கொடுக்க உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

2க்கு 1 என்ற விகிதத்தில், நீங்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விஷயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

”மானியங்கள் இல்லையென்றால், மஸ்க் கடையை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். அதன் பின் ராக்கெட் ஏவ முடியாது. செயற்கைக்கோள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது” என டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில் டிரம்பை எதிர்த்து எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்