வட அமெரிக்கா

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மஸ்க் முடிவு – செயல் திறன் துறையில் இருந்து விலகல்

அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்

“சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ‘ஏமாற்றமடைந்தேன்’ என அதை விமர்சித்திருந்தார். இந்நிலையில், அந்த விமர்சனத்தை வெளிப்படுத்திய மறுநாளே அரசு பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

புதிய வரி மசோதாவின் சில அம்சங்களில் தனக்கு விருப்பம் இல்லை என ஊடகத்துடனான பேட்டியில் மஸ்க் தெரிவித்திருந்தார். இனி ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு சார்ந்து மஸ்க் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட DOGE துறையில் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்தார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!