வட அமெரிக்கா

அரசுப் பணியின் போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவின் அரச செயல்திறன் துறையில் பணியாற்றிய காலத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்திய சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

“நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகையினால் இந்த குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அரசு செயல்திறன் துறையில் தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க் பணியாற்றிய காலத்தில் அவரிடம் அடிக்கடி போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஒழுங்கற்ற நடத்தை இருந்ததாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தியைக்காட்டி தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்தக் கட்டுரையில், ‘எலான் மஸ்க் கேட்டமைன், எக்ஸ்டசி போதை வஸ்துக்கள் மற்றும் சைக்டெலிக் காளான்களை உட்கொண்டார். அது அவரின் அரசுப் பணி குறித்து கேள்விகளை தூண்டியது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் தனது பணிநிறைவு நாளில் பேசிய மஸ்க், பத்திரிகையின் மீது குற்றம்சாட்டி பிரச்சினையை திசைதிருப்பினார்.

ஃபாக்ஸ் செய்திகளின் பீட்டர் டூகி, நியூயார்க் டைம்ஸ் செய்தி பற்றி மஸ்கிடம் கேட்ட போது, “ரஷ்யா -கேட் பற்றி பொய்யான செய்தி வெளியிட்டு புலிட்சர் பரிசு வாங்கிய அதே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையா? அதே நிறுவனமா? நான் அப்படிதான் நினைக்கிறேன். ரஷ்யா – கேட் பற்றிய பொய்யான செய்தி வெளியிட்டதற்காக நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக நீதிபதி தீர்ப்பளித்தார். அவர்கள் தங்களின் புலிட்சர் பரிசைத் திருப்பித் தரக் கேட்டிருக்கலாம். நாம் வேறு பேசலாம்.” என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

இதனிடையே, வெள்ளை மாளிகையின் பணியாளர்களின் துணைத்தலைவர் ஸ்டீபன் மில்லரிடம், மஸ்க்கின் போதைப் பொருள் பயன்பாடு குறித்து கேட்கையில் அவர், “தெற்கு எல்லையில் கொட்டப்படும் போதைப் பொருள்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். அடுத்த கேள்வி.” என்று மஸ்க் குறித்த கேள்வியைத் தவிர்த்தார்.

 

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!