வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை – பெண்ணொருவர் உட்பட மூவர் கைது!
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
வெலிகம பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.





