செய்தி

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – இராணுவ ஒப்பந்த விவகாரமே காரணம்?

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த விசாரணைகளில் பல தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, இராணுவத்தை விட்டு வெளியேறிய ஒரு சிப்பாய்க்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தம் தொடர்பான தகராறே, தென் மாகாணப் பாதாள உலகக் கும்பல் அவரைக் கொலை செய்யக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டுக் கொலையாளி தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரைக் கைது செய்ய பொலிஸ் சிறப்புப் படைகள் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

கொலையாளி மற்றொரு கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும், பின்னர் அவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வெவ்வேறு பாதையில் சென்றதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தக் கொலையில் மிதிகம ருவான், மிதிகம சுட்டி மற்றும் ஹரக்கட்டா ஆகிய பாதாள உலகக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொலையின் போது அப்பகுதியில் நடந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளும் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர கடந்த சில ஆண்டுகளாகவே மரண பயத்தில் இருந்ததால், ரகசியமாக வாழ்ந்து, தனது வசிப்பிடத்தைக் கூட மாற்றினார் எனத் தெரியவந்துள்ளது.

அச்சுறுத்தல் காரணமாக அவர் சுமார் பதினைந்து தனிப்படை காவலர்களை வைத்திருந்தார். இருப்பினும், கொலை நடந்த நேரத்தில் அந்தக் காவலர்களில் ஒருவர் கூட அவருக்கு அருகில் இல்லை என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திலும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி