புட்டினின் அணுசக்தி ஜெனரல் கொலை : அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் வழங்கிய குற்றவாளி!
விளாடிமிர் புட்டினின் உயர்மட்ட அணுசக்தி ஜெனரலை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் கதிர்வீச்சு, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை தனது அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தபோது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அக்மத் குர்பனோவ் என்ற 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐரோப்பாவில் புதிய வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான $100,000 பணம் வழங்குவதாக கூறப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணையின் போது, அவர் உக்ரேனிய சிறப்பு சேவைகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக விளக்கினார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அவர் மாஸ்கோவிற்கு வந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.