முன்பள்ளிகள் திறப்பு: சிறுவர் அபிவிருத்தி செயலகம் அறிவிப்பு.
சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஆரம்பகாலச் சிறுவர் அபிவிருத்திச் செயலகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து முன்பள்ளிகளும் (Preschools) ஆரம்பகாலச் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களும் 2025 டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும்.
அண்மையில் ஏற்பட்ட அவசரகால அனர்த்த நிலை காரணமாக இந்த நிலையங்கள் முன்னர் மூடப்பட்டிருந்தன.
பிள்ளைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நிலையங்களின் பாதுகாப்பு மதிப்பீடுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னரே இந்தத் திறப்பு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.





