ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தாவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு
ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் வீட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருக்கின்றனர்.
பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியிருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை இந்தக் கால தலைமுறையினர் புரிந்துகொள்ளும் விதமாக படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சீதையாக கீர்த்தி சனோனி, ராவணனாக சைஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ஹிந்தி, தமிழ்,மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் படு மொக்கையாக விமர்சனம் வந்ததன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான இரண்டு நாட்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக கூறிய படக்குழு தற்போது 350 கோடி ரூபாய்வரை படம் வசூலை வாரிக்குவித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் ஆதிபுருஷ் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாகியிருக்கின்றனர்
ஒருபக்கம் விமர்சனத்தில் அடி, வசூலில் அடி என இரண்டு பக்க மத்தளமாக அடிவாங்கிக்கொண்டிருந்த ஆதிபுருஷை சுற்றி இன்னொரு சர்ச்சை எழுந்தது. அதாவது படத்தில் சீதை பாரதத்தின் புதல்வி என்ற வசனத்துக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து படத்தை தடை செய்ய; மற்றொரு பக்கம் ராவணன் பற்றி அனுமன் பேசும் வசனத்துக்கு இந்தியாவுக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது.
இப்படி இருக்க அனுமன் ராவணன் வசனத்தை மாற்றியமைப்பதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் படத்தின் வசனகர்த்தாவான் மனோஜ் முண்டாஷிர் தனக்கு அடையாளம் தெரியாந்த நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. எனவே தன்னுடைய உயிருக்கு ஆபத்து இர்ப்பதாக காவல் துறையில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு மும்பை காவல் துறையினர் பாதுகாப்பை அளித்துள்ளனர். முன்னதாக இந்த விவகாரம் குறித்து மனோஜ் அளித்திருந்த விளக்கத்தில், “எனது சொந்த சகோதரர்கள் சமூக வலைதளங்களில் எனக்கெதிராக அநாகரீகமான வார்த்தைகளை எழுதினர். என் தாயைப் பற்றி அவதூறாக எழுதினார்கள்.ஒவ்வொரு தாயையும் தனது தாயாகக் கருதும் ஸ்ரீ ராமரை மறந்து இப்படி பேசும் அளவுக்கு என் சகோதரர்களுக்கு எங்கே திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது” என குறிப்பிட்டிருந்தார்.