இந்தியா

மும்பை படகு விபத்து: காணாமற்போனவர் ஒருவரின் உடல் கண்டெடுப்பு

இந்தியாவின் மும்பை நகருக்கு அருகே நிகழந்த படகு விபத்தில் காணாமற்போன பயணி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14க்கு அதிகரித்துள்ளது.

இந்தியக் கடற்படையின் ‘ஸ்பீட்போட்’ படகு ஒன்று, ‘நீல் கமல்’ என்ற பெயர் சூட்டப்பட்ட பயணிகள் ‘ஃபெரி’ படகு மீது மோதியதால் விபத்து நேர்ந்தது. கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 18) நிகழ்ந்த அதில் 13 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) காணாமற்போன 43 வயது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விபத்தில் காணாமற்போன ஏழு வயது சிறுவனைத் தேடும் பணிகள் இன்னும் தொடர்வதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான கடற்படைக் கப்பல், பயணிகள் படகு இரண்டிலும் மொத்தம் 113 பேர் இருந்தனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்து விட்டனர், 98 பேர் மீட்கப்பட்டனர். காயமுற்ற இருவரும் மீட்கப்பட்டோரில் அடங்குவர்.

விபத்து நேர்ந்தபோது கடற்படைப் படகில் அறுவர் இருந்தனர். அவர்களில் இருவர் உயிர் தப்பியதாகக் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே