மும்பையில் 14 பேரின் உயிரை பறித்த விளம்பர பலகை – 74 பேர் காயம்
மும்பை நகரை தாக்கிய கடும் புயலின் போது, பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 74 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்புறம் இருந்த 100 அடி விளம்பர பலகை இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அந்த இடத்தில் தொடர்புடைய விளம்பர பலகையை பொருத்திய விளம்பர நிறுவனம் மீது மும்பை பொலிஸார வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.





