காங்கோவில் பரவி வரும் mpox தொற்று!

காங்கோ குடியரசின் பல பிராந்தியங்களில் mpox வழக்கு பதிவாகியுள்ளது.
mpox என்பது காட்டு விலங்குகளில் இருந்து பரவும் ஒருவகை வைரஸாகும். இது மனிதர்களுக்கு அரிதாகவே பரவும்.
அவ்வாறு மனிதர்களுக்கு பரவ தொடங்கியபின் தவறான பாலியல் உறவுகள் மூலம் ஒருவரிடம் இருந்து பிறிதொருவருக்கு இலகுவாக பரவ ஆரம்பிக்கிறது.
இந்நிலையில் காங்கோ குடியரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 43 வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பல தசாப்தங்களாக Mpox பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)