ஜெர்மனியில் கடவுச்சீட்டு – அடையாள அட்டைகள் பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டில் கடவுச்சீட்டுக்கள் அடையாள அட்டைகள் பெறுவது தொடர்பில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடக்கம் ஜெர்மனியில் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகள் பெறுவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை டிஜிடல் முறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
அடையாள அட்டை மற்றும்கடவுச்சீட்டுக்களான படங்களை எடுக்கும் பொழுது அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட படங்களை எடுக்கும் நிறுவனவனங்களிடம் சென்று எடுக்க வேண்டும்.
இந்நிலையில் டிஜிடல் முறை மூலமாக படங்கள் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது.
இதேபோன்று கையடையாளங்கள், கை ஒப்பங்களும் இணையதளங்களின் ஊடாக மேற்கொள்ள கூடிய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்பட்ட அடையாள அட்டைக்கான, அல்லது கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பரீசீலணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டையை வழங்கும் பொழுது தபால் மூலமாகவும் பெற்றுக்கொள் கூடிய வாய்ப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நடைமுறைகளின் போது மக்கள் தங்களது பங்களிப்பை சரியான மேற்கொள்ளும் பட்சத்தில் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையானது மிகவிரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.