தங்கம் கடத்திய எம்.பி!!! அறிக்கை கையளிப்பு
அண்மையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த குற்றச்சாட்டில் 70 இலட்சம் ரூபா தண்டப்பணத்தில் விடுவிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பான முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் இலங்கை சுங்கம் வழங்கியுள்ளது.
இலங்கை சுங்கத்தினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சமர்ப்பித்து எம்.பி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ள போதிலும், இதுவரை பதிலளிக்கவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு அலி சப்ரி எம்.பி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல கட்சி தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.