இலங்கையில் குற்றங்களை தடுக்க களமிறங்கும் மோட்டார் சைக்கிள் குழுக்கள்
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக சுமார் 100 அதிகாரிகளைக் கொண்ட பல மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேல் மாகாணம் மற்றும் காலி மாவட்டத்திற்கு இந்த பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.





