ஜெர்மனியில் தாயினால் மகளுக்கு நேர்ந்த கதி – பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்
ஜெர்மனியில் வளர்ப்பு மகளை பல்வேறு வகையில் கொடுமைப்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூப்ராண்டன்பர்க் பகுதியில் தனது வளர்ப்பு மகளை கடுமையாக துஷ்பிரயோகம் செய்து வாரக்கணக்கில் குளியலறையில் அடைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் நியூப்ராண்டன்பர்க் பிராந்திய நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
2020 முதல் 2021ஆம் ஆண்டின் கோடைகாலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் சிறுமியை பலமுறை தாயார் குளியலறையில் பூட்டி வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, வாரக்கணக்கில் குளியலறையிலேயே சாப்பிட்டு, அதிலேயே உறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியும் தன் மலத்தையே உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுதிக்கு 14 வயதென தெரியவந்துள்ளது.
39 வயதான பெண்ணுடன் அவரது 46 வயதான கணவர் மற்றும் பிரதான சந்தேக நபரின் 17 வயது மகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடுமையான உடல் உபாதைகள், பாதுகாப்பில் உள்ளவர்களை தவறாக நடத்துதல் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின்படி, 39 வயதான அவர் 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி வரை தனது வளர்ப்பு மகளைத் தொடர்ந்து தண்டித்துள்ளார்.
சில நேரங்களில் சிறுமியை நீண்ட நேரம் நீரில் மூழ்கடித்து மூச்சுத் திணறும் வரை அழுத்தி சித்திரவதை செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் ஊடாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் தாயார் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.