அன்னையர் தினம் – தனது தாயாருக்கு பிரதமர் உருக்கமான அஞ்சலி
பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர், அன்னையர் தினமான இன்று தனது மறைந்த தாயாருக்கு நெகிழ்ச்சியான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தனது தாயார் ஜோசபின் ஸ்டார்மர் (Josephine Starmer )அமைத்துக் கொடுத்த “நம்பமுடியாத உதாரணமே” தனது வாழ்வின் வழிகாட்டி என்றும் பிரதமர் பெருமிதமடைந்தார்.
தனது தாயார் நீண்ட காலம் கடுமையான நோயுடன் போராடிய போதிலும், ஒருபோதும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களுக்கே முதலிடம் கொடுத்தார் என்றும் பிரதமர் தனது தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘ஸ்டில்ஸ் நோயால்’ (Still’s disease) பாதிக்கப்பட்டிருந்த ஜோசபின், பல ஆண்டுகளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலேயே தனது வாழ்க்கையை கழித்தார்.
தனது மகன் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் காலமானார்.
இந்நிலையில் தனது தாயின் அசாத்தியமான துணிச்சலும், எதற்கும் தளராத மன உறுதியுமே தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருப்பதாகப் பிரதமர் ஸ்டார்மர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.





