வட அமெரிக்கா

அமெரிக்காவில் 13மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்..!

அமெரிக்காவில் தாய் ஒருவர் காரை தன்னுடைய 13 மாத பெண் குழந்தை மீது தவறுதலாக மோதிய சம்பவம் இறுதியில் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை காட்டன்வுட்டில் உள்ள வெஸ்டர்ன் டிரைவ்-வில் தாய் ஒருவர் தன்னுடைய காரை நெருக்கமான பகுதியில் செலுத்தி கொண்டு இருந்த போது தவறுதலாக அவருடைய 13 மாத பெண் குழந்தை மீது காரை செலுத்தியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த 13 மாத பெண் குழந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 13 மாத பெண் குழந்தை வெர்டே பள்ளத்தாக்கு மருத்துவ மையத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் பெயர் சைரா ரோஸ் தோமிங் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

us-mother-run-over-her-car-on-13-month-old-girl

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்று குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பொலிஸார், விசாரணையில் அரிசோனா பகுதிக்கு அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அருகில் சம்பந்தப்பட்ட தாய் காரை குறுகிய இடத்தில் இயக்கி கொண்டிருந்த போது இந்த விபத்து தவறுதலாக ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

13 மாத பெண் குழந்தையை முன் இருக்கையில் அமர வைத்து இருந்ததால் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து பெண் காரை இயக்கி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆனால் காரில் இருந்த கேனபி(canopy) முன் சக்கரத்தில் சிக்கி இருந்ததால் இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டு இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாய் மீது எந்த குற்ற வழக்குகளும் பதியப்பட வில்லை இருப்பினும், பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!