கர்நாடகாவில் 3 நாள் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்
கர்நாடகாவின்(Karnataka) பெலகாவி(Belagavi) மாவட்டத்தில் தாய் ஒருவர் புதிதாக பிறந்த பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் மனமுடைந்த தாய் இந்தக் குற்றத்தைச் செய்ததாக தெரியவந்துள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க்(Ramturk) தாலுகாவின் ஹிரேமுலங்கி(Hiremulangi) கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நான்காவது முறையாகவும் பெண் குழந்தை பிறந்ததால் மட்டுமே தாய் தனது மூன்று நாள் மகளை கழுத்தை நெரித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குழந்தை ராம்துர்க் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு கழுத்தை நெரித்து மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
குற்றம் சாட்டப்பட்ட அஸ்வினி ஹல்கட்டி(Ashwini Halkatti) கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





