குரங்கிற்காக மகளை விற்பனை செய்த தாய் – அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் ஒரு பெண் தத்தெடுத்த மகளைக் குரங்கிற்காக விற்பனை செய்தமை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மிஸொரி மாநிலத்தைச் சேர்ந்த பெண் தத்தெடுத்த மகளை டெக்ஸஸ் மாநிலத்தைச் சேர்ந்தவரிடம் குரங்கிற்காக விற்பனை செய்துள்ளார்.
அவர் மகளைச் சித்திரவதை செய்தாரா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தத்தெடுத்த மகளை அவர் காலணியைக் கொண்டு அடித்தார் என்று அந்த மகள் கூறினார்.
அந்த 70 வயதுப் பெண் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. அவருக்கு 250,000 டொலர் பிணை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரைப் பிரதிநிதிக்க வழக்கறிஞரும் இல்லை.
பத்து ஆண்டாக அந்தப் பெண் 200க்கும் மேலான குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கிறார். தத்தெடுத்த சில பிள்ளைகளை அவர் துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கிற்கு முன் 15 வருடங்களாக அவரைப் பற்றிச் சுமார் 250 பிள்ளைகள் புகார் செய்துள்ளனர்.