இந்தியா

அனுமதியின்றி மேக்கப் கிட்டை பயன்படுத்திய மாமியார்.., ஆத்திரமடைந்து மருமகள் செய்த செயல்!

தன்னுடைய மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக விவாகரத்து கோரிய இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லி, ஆக்ராவின் புறநகர் பகுதியான மல்புராவில் வசித்து வரும் இரண்டு சகோதரர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக சகோதரிகளாகப் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூத்த மருமகளின் மேக்கப் கிட்டை எடுத்து மாமியார் பயன்படுத்தியுள்ளார். அதோடு, அவரது நவீன உடைகளையும் அணிந்துள்ளார்.இதனால் மாமியாருடன் மூத்த மருமகள் சண்டை போட்டுள்ளார். பின்னர், இதுகுறித்து மாமியார் தனது மகனிடம் புகாராக கூறியுள்ளார்.

விசித்திரமான காரணங்களுக்காக விவாகரத்து செய்துகொண்ட தம்பதிகள் - Lifie.lk  Tamil | வாழ்க்கைக்கு....

இந்த விவகாரம், கணவன் மனைவிக்குள் பெரிய பிரச்சனையாக வெடிக்க, ஒரு கட்டத்தில் மனைவியை கணவர் தாக்கியுள்ளார். மேலும், மனைவியையும், தனது தம்பி மனைவியையும் அவர்களது தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மூத்த மருமகள் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இதன் பின்னர் குடும்ப நல ஆலோசனைக்குழுவினரிடம் இந்த வழக்கு சென்ற போது பெண்ணிற்கு அறிவுரைகள் வழங்கினர்.ஆனால் அந்த பெண், அம்மாவின் பேச்சைக் கேட்டு கணவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் , கட்டாயம் விவாகரத்து செய்தே தீருவேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண்ணிற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே