ஆஸ்திரேலியாவில் குழந்தையின் உடலை குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரில் வைத்த தாய்

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலை குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரில் வைத்ததற்காக ஜெரால்டனைச் சேர்ந்த ஒரு தாய்க்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெர்த் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.
வீட்டில் ரகசியமாக குழந்தை பிரசவித்த பெண், புதிதாகப் பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்த நிலையில் கணவர் அதனை குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரில் வைத்துள்ளார்.
அந்தப் பெண் தான் கர்ப்பமாக இல்லை என்று மறுத்து, கல்லீரல் புற்றுநோய் இருப்பதாகக் கூறி GoFundMe இணையதளத்தில் சுமார் 3,000 டொலர் திரட்டினார்.
ஆனால் மருத்துவ அறிக்கைகள் அந்த நிலை பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
குழந்தையின் உடல் குப்பைப் பையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், குழந்தையின் உடலில் மெத்திலாம்பேட்டமைன் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்த உடலை மறைத்து வைத்தது மற்றும் மோசடி செய்ததாக அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் அவரது கணவர் இறந்த உடலை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்ட பிறகு 12 மாத சமூக அடிப்படையிலான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.