நொய்டாவில் 13வது மாடியில் இருந்து விழுந்த தாய் மற்றும் 12 வயது மகன் மரணம்
உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் 13வது மாடியில் இருந்து விழுந்து 12 வயது குழந்தையும் தாயும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தின் 13வது மாடியில் வசித்து வந்த தர்பன் சாவ்லாவின் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தக்ஷ் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதிக்க வேகமாக ஓடியதாக அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்தார்.
தக்ஷைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது 38 வயது தாயார் சாக்ஷி சாவ்லா ஓடினார், ஆனால் இருவரும் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், தர்பன் சாவ்லா வீட்டின் மற்றொரு அறையில் இருந்துள்ளார்.





