தாய் வெளிநாட்டில் – இலங்கையில் 14 வயதுடைய சிறுவன் எடுத்த தீர்மானம்
மாதம்பே பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுவன் குடும்பத்தினரின் கவனம் இல்லாத காரணத்தினால் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது இளைய சகோதரர் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததாக கூறப்படுகிறது.
சிறுவனின் தாய் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்கள் தாத்தாவுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் புலமைப்பரிசில் சித்தியடைந்த சிறுவன் தொடர்பில் மாத்திரமே சிறுவனின் தாயும் பெரியவர்களும் பேசிக் கொண்டுள்ளன்.
தன் மீது யாரும் அவதானம் செலுத்தாமையினால் மனமுடைந்த சிறுவன் வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 12 times, 1 visits today)





