டொராண்டோவில் மிகவும் தேடப்பட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குற்றவாளி கைது
டொராண்டோ(Toronto) காவல்துறையினர், கனடாவின்(Canada) மிகவும் தேடப்படும் பட்டியலில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வ விடுதலையை(பரோல்) மீறியதற்காக கனடா முழுவதும் தேடப்பட்ட 24 வயதான நிக்கோலஸ் சிங்(Nicholas Singh) கைது செய்யப்பட்டதாக டொராண்டோ காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோவின் பாதர்ஸ்ட்(Bathurst) மற்றும் டுபோன்ட்(Dupont) தெரு பகுதியில் ஒரு வாகனத்தில் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்கள் வைத்திருப்பதைத் தடை செய்யும் முன் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் சிங் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதால் தற்போது உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் தடைசெய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.





