மும்பை உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசமானது
இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளை பாஜக – சிவ சேனா கூட்டணி வசப்படுத்துகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இன்னும் சில மாநகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





