ஜப்பானில் இரண்டு வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு!
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அகுசேகி தீவில் இரண்டு வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த பகதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் கடற்கரையிலிருந்து சுமார் 20 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.





